உன்னை பற்றி கவிதை எழுத எனக்கு மனமில்லை -ஏனென்றால் உன்னை எழுத்துக்களில் அடக்க எனக்கு தெரியவில்லை
அம்மா- நீ ஒரு மூன்று எழுது உலகம்,இதில் யாவரும் அடக்கம்
உன்னை முகவரி இல்லாத ஒருவனோடு (கடவுள் )ஒப்பிட்டு பார்க்க எனக்கு மனமில்லை -காரணம் முகவரி தெரிந்த உன்னை தவிற வேறு யாவரும் என் நினைவிலில்லை
பசி என்னும் வார்த்தை என்னை நெருங்கி விடாமல் இருக்க -நீயோ ! அதற்கு உண்ணாவிரதம் மேற்கொள்வாய்
நான் தடையின்றி கல்வி கற்க -நீ பிறர் தடம் அறியா அடகு கடைக்குச் செல்வாய்
அம்மா ! எனக்கொரு ஆசை,நான் இன்னுமொரு ஜென்மம் எடுப்பாயின் -நான் பெண்ணாக பிறத்தல் வேண்டும்,அதில் என்னை போல் ஒரு மகனுக்கு உன்னை போல் நான் தாயக இருத்தல் வேண்டும்.
பிறப்பறியா குழந்தை பேச அறியும் முதல் வார்த்தை அம்மா
இறப்பரிய மனிதன் பேச துடிக்கும் கடைசி வார்த்தை அம்மா
அம்மா என்ற ஒரு சொல் மனிதனின் நாவில் இல்லையேல் என்றோ கடல் வற்றி இருக்கும்
ஒரு நாள் உன்னை காளன் கொண்டு போகும் வேளை வந்தாலும் -இந்த மூச்சு இந்த உடம்பு கூட்டில் நில்லாது.
ஏனெனில் இந்த மூச்சை கொடுத்தவளே நீதானம்மா
அம்மா உனக்கு நிகர் நீதானம்மா..........,
முதலில் இதை உங்கள் அம்மாவுக்கு காட்டுங்க பெற்றவள் மனம் மகிழும்.....
ReplyDelete........எல்லைகள் இல்லாதவள் .. அம்மா. தன்னை .ஈந்தவாள் தா..+ஈ ய .
உங்களுடைய இந்த பதிவிற்கு மிகவும் நன்றி
ReplyDeleteநிச்சயமாக ஒரு நாள் எங்கள் அம்மாவிடம் காட்டுவேன்