"நடனம் எனபது கலாசாரம்-நாகரிகம்
எனும் பெயரால் ஆகிறது விபச்சாரம்"
இருள் சூழ்ந்த இரவுகளில் விழித்திருக்கிறது
விடுதியின் கண்கள்
உன் உயிரில்லாத பொழுது புண்ணியம் இருந்தால்
திறக்கும் - சொர்கத்தின் வாசல்
உன் உயிருள்ள பொழுது அச்சடித்த காகிதம் இருந்தால்
திறக்கும் - விடுதியின் வாசல்
உடலுக்கு போதை - மது
கண்களுக்கு போதை - மாது
"அரியது யாவும் கூட எளியதாக தெரியும் மங்கும்
ஒளிகளில்" காரணமின்றியே கால்கள் நடை போட தோன்றும்
மௌனமான அந்த இருளில் அங்கு
மட்டும் ஒலி சத்தமாக பாட கூடும்
தடுமாறும் வாழ்கையில் நடனமாடும் கால்கள்
தப்பு என்று தெரிந்தும் மயக்கும் நடனமாதுவின் கண்கள்
ஆடை கூட தவறாக தெரியும் இந்த கண்களுக்கு
வாடை காற்றும் கூட நாற்றமாக தான் மாறி போகும்
இரவு முழுக்க நடனம் - விடிந்தால் தெரியும் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இது எல்லாம்,
நாகரிக கலாச்சாரம் - இதை ஒரு,
தவறாக கருதுவது அபச்சாரம்
பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் விபச்சாரத்தை கூட நாகரிகமாக
இரவு வாழ்கை என்கிறான்.
பணமுள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம் - அனால்,
பணமிள்ளாதவனுகோ இந்த ஏக்கத்திலேயே தன ஆயுளை முடிக்கிறான்