Total Pageviews

18 February 2011

பருவம்

மனித உணர்வுகளுள் எழுத்துகளில்லா  
ஒரு கவிதை 

பள்ளி பருவத்தில் ஏற்படும் ஒரு 
உணர்வு 

அந்த உணர்வு என்னுள்ளேயும் தோன்றியது
தோன்றிய 
முதல் நாள் நிலை கண்ணாடியை 
காதலித்தேன் 
இரண்டாம் நாள் என்னையே நான் காதலித்தேன் 

அழகு என்றல் பெண்களுக்கு மட்டும் தானா....
ஆண்களுக்கும் உண்டு என்று என்னையே நான் 
மெருகேற்றிக் கொண்டேன்

கண்கள் காண்கின்ற காட்சிகள் எல்லாம் 
அழகாகவே தெரிந்தது 
அருவருப்பான குப்பை தொட்டியைக் கூட கலை நயமாகவே 
பார்த்தேன் - அது 
பல உயிர்களுக்கு உணவாகி,தங்கும் விடுதியாகவும் 
இருக்கிறது என்று 

இது நாள் வரை சூரியனை பார்த்தல் மட்டும் நாணம் 
கொண்ட என் கண்கள் - இன்று முதல் பெண்களுக்கும் 
என் கண்கள் அடி பணிந்தது 

பெண் அல்ல பெண்களை பார்த்தாலே என் கண்கள் 
சடுகுடு ஆடுகிறது 
தம்பி என்று உரிமையோடு அழைக்கும் - பெண்களுக்கு கூட 
என் கண்கள் காதல் வலை வீசுகிறது 

மூடி வைத்த நீராவியை திறந்து வைத்தது போல்
என் முகத்தில் இருக்கும் பரு துளிகள் 
தூக்கம் என்று தெரிந்தே கனவுகள் 
காணும் என் கண்கள் 

"மறைவிடமாக இருக்கும் பொருளை 
பார்பதர்ககவே ஏங்கும் என் விழிகள்" 

"எனக்கும் கருவறையாகிய கழிப்பறைக்கும் 
தண்ணீரில் எழுதிய  ஒரு ஒப்பந்த ரகசியம்" 
இது எல்லாம் உறுதிபடுத்தியது - நான்   
பருவமாகி விட்டேன் என்று 
பெண்கள் பருவமுற்றால் - கொண்டாட்டம் 
ஆண்கள் பருவமுற்றால் - திண்டாட்டம் 
எறியும் நெருப்பை அனைப்பதற்கே தினம் தினம் 
போராட்டம் 
இறைவனால் படைக்க பெற்றானோ,அறிவியல் பூர்வமாக 
தோன்றினானோ இல்லை சுயம்புவாக உருவானானோ
என்று தெரியவில்லை 
அனால்,ஆறடி உயரத்திற்குள் ஆயிரமாயிரம் அதிசயமடா
 நான் இல்லற மனிதன் ஆகிவிட்டேன் என்று - என்னுள் 
இருக்கும் உடலுறுப்பு எனக்கு தெரியாமலேயே 
மாறுதல் கொள்கிறது
எவனாக இருந்தாலும் அந்த உணர்வுகள் படைத்தவன் 
எவனோ ! அவனே இறைவன் ஆவான்.....