Total Pageviews

28 November 2010

அன்புள்ள காதலிக்கு

இது என் நண்பனின் காதளுக்குகாக எழுதியது,

காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காலன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது

மூச்சின் கற்று விண்ணுலகை நோக்கி பயணிக்கும் போதும்
உன் பெயர் கொண்ட சொல் அழியாது

இனிமையான மொழியாம் என் தாய் மொழி தமிழ் -அதில்
ஆயிரம் சொற்கள் கொட்டி கிடக்க -அதில் மூன்று சொற்கள் மட்டும்
என் நாவில் வளம் வருவது ஏன்

மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
என் உயிர் அடக்கம்

உன் இனிமையான பெயரை கேட்ட இந்த செவிகளுக்கு -
வேறு பெயர் கேட்பதற்கு கசக்கிறது

அடி பெண்ணே கேள் !
நீ இல்லாத ஒரு உலகம் என் கனவிலும் கொல்லாது
உன் பெயரில்லாத என் பெயர் எந்த கல்லறையிலும் இருக்காது

பெயர் சொல்லாத ஒருவனை கடவுள் என்பேன்
பெயர் சூடிய உன்னை பிரியா என்பேன்

4 comments:

  1. //மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
    உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
    என் உயிர் அடக்கம்//

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி தோழரே,உங்களுடைய கருத்துக்கள் என்னை மிகவும் நெகிழ செய்தது
    உங்களுடைய பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. காளன் ........தவறு . ....
    காலன் வந்து எனை தூக்கி சென்றாலும் காலன் எமனைக் குறிக்கும் சொல்.
    ரு.............. .று ...........கவனியுங்கள். தமிழ் மீது ஆர்வமுள்ள் நிலாமதி

    ReplyDelete
  4. என்னுடய தவறை சுட்டி காட்டியதுக்கு மிகவும் நன்றி
    ஆனால்,இது தவறே என்று தெரியாமல் தவறு செய்து விட்டேன்
    ஏனென்றால்,நான் கல்வி கற்றதோ ஆங்கிலத்தில் நாகரீக காரணமாக
    என்னை ஆங்கில பள்ளிக்கூடதில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர்கள்
    அது அவர்களின் தவறு அல்ல இன்று ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் அல்ல நாகரீகம் என்று ஆகிவிட்டது
    என்ன செய்வது நாகரீக சேற்றில் தான் நாம் குளிக்கவேண்டும் என்று இருக்கிறதே
    ஆனால்,நிச்சயமாக இந்த ஒரு மிக மாறுதலை சந்திக்கும்
    அது வரை நான் விழித்திருப்பேன் உங்களுடய பகிர்வுக்கு மிகவும் நன்றி

    ReplyDelete