
"இந்த அழகிய உப்பு நீருக்கு எத்தனை நாள் ஆசையோ -அவளின் பாலாடை பாதத்தை தழுவி பார்க்க"
அவளின் மௌன சிரிப்பை கேட்பதற்காக ,அந்த அலைகளும் திரும்பி செல்லும் போது மௌனமாகவே செல்கிறது
இன்று மட்டும் புதிதாய் ஒன்று விளங்கியது ,அது ஏன் கடலின் நிறம் நீலமாக இருக்கிறது என்று ?
"அதற்கு காரணம் நீல வானம் - அல்ல
என் தேவதையின் நீல விழி பானம்"
இன்று கடலின் காற்று கூட எனக்கு புதிதாய் தெரிந்தது ஏன் என்றால்,
"இவளை தொட முடியவில்லையே என்று மீன்கள் விட்ட பெருமுச்சியாகவே எனக்கு தெரிந்தது".
இப்படி அவளின் அழகை பார்த்து நான் ரசித்து கொண்டிருந்தேன்,என்னுள் புதிதாய் ஒரு எண்ணம் தோன்றியது என் காதலை அவளிடம் சொல்லிவிடலாம் என்று ,
நாங்கள் நட்பாய் தான் பழகினோம்-அனால்,எனக்குள்ளே நட்போடு காதலும் வளர்ந்து விட்டது ஆனால், அதற்க்கு நான் மட்டும் காரணம் அல்ல பருவம் வந்த ஆண் மகனுக்கே உண்டான குணம் அது .நான் முதலில் அவள் நட்பை தான் காதலித்தேன் அதனால், தான் என்னவோ என் மூளை அவளையே என் வாழ்கையில் கை பிடிக்க தூண்டியது. சிறிது நேரம் கழித்து,
கடலின் மொழி மௌனமானது காரணம், அவள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அன்று தான் எனக்கு ஒரு விளக்கம் தெரிந்தது,
"ஏன் கடல் நீர் உப்பு கரைக்கிறது என்று -அவளின் பிரிவை தாங்க முடியாத கடல் அழுது கொண்டிருகிறது".
அவள் என் அருகில் வந்து அமர்ந்தால் எனக்கோ இந்த உலகத்தின் ஜன்னல் வழியாக விண்வெளி வாசிகளை எட்டி பார்ப்பது போல் ஒரு உணர்வு
எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நெகிழ்வான வார்த்தைகளால் கடலை அலங்கரித்து கொண்டிருந்தாள்.அப்பொழுது தான் நான் இவளுடைய பெருமிதத்தை கண்டு வியந்தேன்
"கடலோ ! இவள், எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று பெருமை பட்டு கொண்டிரிக்கிறது -அனால், இவளோ கடல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சிறிதளவும் கர்வம்மின்றி கடலின் அழகை பெருமை படுத்தி கொண்டிருக்கிறாள்".
மேலும் ,அவள் அலையின் ஓசையை பற்றி பேசி கொண்டிருந்தாள்.அனால் நானோ அவளின் வார்த்தைகளை கவனித்து கொண்டிருந்தேன்
"வண்டு துளை போடாமல் ஒரு ரோஜா பூ தனக்குள் தேக்கி வைத்திருக்கும் தேனை வெளியே தள்ளுவது போல -அவளுடைய, செவ்விதழ்களில் இருந்து வரும் வார்த்தைகள் தேனை போல் தான் என் காதில் பாய்ந்து கொண்டிருந்தது ".
"தமிழ் அழகிற்கும், இனிமைக்கும் தாயான ஒரு மொழி -அம்மொழியின் வார்த்தைகள் அவளின்,நாவில் நடன மடுவதை கண்டேன்"
அட டா ,அழகான பெண்கள் தமிழ் பேசுவதை கேட்பதற்கே இறைவனிடம் இன்னொரு செவி வேண்டுகிறேன்.
இப்படியே ! நான் அவளுடைய கா ர்மேக விழிகளை பார்த்து கொண்டே எனக்குள் ஆயிரம் எண்ணங்களை வரைய தொடங்கினேன்
என் காதலை அவளிடம் சொல்லும் நேரம் வந்தது என்று நினைத்தேன்,சட்டென்று எனக்குள் ஒரு சிறு தயக்கம்
எங்கே என் காதலை சொல்லி நட்பை கொச்சை படுத்தி விடுவோமோ என்ற அச்சம் பிறகு என் மூளை என்னிடம் சொன்னது.
"காதல் சுவடுகளை திருப்பி பார் நட்பு என்னும் செடியில் தான் காதல் பூ மலரும்" என்றது
ஆதலால் நட்பை பெருமிதமாக நினைத்து கொண்டு சொல்ல முற்பட்டேன் திடிரென்று,
என் மூளை என் மனதிடம் ஒரு நொடி நில் என்றது ஏன் என்றது மனம் அதற்கு மூளையோ என் காதலை சொல்லி அவள் மறுத்து விட்டால் அதை நான் ஏற்று கொள்வேன் ஆனால்,நீயோ துடிப்பதை நிறுத்து விடுவாய் ஆதலால் ஒரு நொடி உன்னை தயார் படுத்தி கொண்டு செல் என்றது
நான் என்னை தேற்றி கொண்டு அவள் பெயரை சொல்லி அழைத்தேன்.அவள் திரும்பி என்னை பார்த்து என்ன என்று கேட்பது போல் தலை அசைத்தால்,
அன்று தான் முதன் முதலாக நாணம் என்னை தொட்டது,
அட டா ! ஆண்கள் வேட்கபட்டால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று என்னை நானே பூரித்து கொண்டேன்
என்னுடைய மூளையோ தமிழிலில் வார்த்தைகளை அலசி கொண்டிருந்தது,எங்கிருந்து ஆரம்பிப்பது என்று
என் நாவு கூட நடன பயிற்சி எடுத்து கொண்டிருந்தது
நான் அவள் கரு விழியை பார்த்து கொண்டே உன்னை காதலிக்கிறேன் என்றேன் சொன்னவுடன் என் மனதிற்குள் ஆயிரமமாயிரம் பூட்டுக்கள் திறந்தது போல் ஒரு உணர்வு,நான் தரையில் தான் இருக்கிறேனா இல்லை வண்ணத்து பூச்சிகள் என்னை தூக்கி கொண்டு போகின்றதா என்று எனக்கு தெரியவில்லை
எனக்கோ அவளின் பதில் மௌனமாக இருந்தது,அந்த மௌனம் சம்மதம் என்று எடுத்து கொல்லவ இல்லை காதல் என்ற சொல்லால் அவள் மனதை கைய படுத்தி விட்டோமே என்று எண்ணி கொல்லவா
அப்பொழுது தான் தெரிந்தது மௌனம் மரணத்தை விட கொடியது என்று
மெதுவாக அவள்,என்னை பார்த்து உன்னை போல் தான் எனக்கும் காதல் தோன்றியது ஆனால்,என் பெண்மை என்னை தடுத்து,
வெட்கதொடும் சிறு புன்னகையோடும் நானும் உன்னை விரும்புகிறேன் என்றால்
"எப்படி பாறைக்குள் புது நீர் ஊற்று எடுக்கிறதோ அது போல் என் நரம்பிற்குள் புது ரத்தம் ஊற்றெடுபதை உணர்ந்தேன்".
அவளுடைய கைகளின் விரல்களில் என்னுடைய விரலை பதித்து கொண்டு ஒருவரை ஒருவர் பேச வார்த்தைகள் இல்லாமல் அந்த கடலிடமிருந்தும்,கடற்கரை மணலிடமிருந்தும் பிரியா விடை பெற்று
சூரியனார் எங்கள் பார்வையிலிருந்து மறைந்து கொண்டே வழியனுப்பினார்,
அவள் என் தோலின் மீது சாய்ந்து கொண்டிருந்தாள்,என் கைகளால் அவளின் கைகளை பிடித்து கொண்டே நடந்து சென்றோம்.........,