Total Pageviews

18 February 2011

பருவம்

மனித உணர்வுகளுள் எழுத்துகளில்லா  
ஒரு கவிதை 

பள்ளி பருவத்தில் ஏற்படும் ஒரு 
உணர்வு 

அந்த உணர்வு என்னுள்ளேயும் தோன்றியது
தோன்றிய 
முதல் நாள் நிலை கண்ணாடியை 
காதலித்தேன் 
இரண்டாம் நாள் என்னையே நான் காதலித்தேன் 

அழகு என்றல் பெண்களுக்கு மட்டும் தானா....
ஆண்களுக்கும் உண்டு என்று என்னையே நான் 
மெருகேற்றிக் கொண்டேன்

கண்கள் காண்கின்ற காட்சிகள் எல்லாம் 
அழகாகவே தெரிந்தது 
அருவருப்பான குப்பை தொட்டியைக் கூட கலை நயமாகவே 
பார்த்தேன் - அது 
பல உயிர்களுக்கு உணவாகி,தங்கும் விடுதியாகவும் 
இருக்கிறது என்று 

இது நாள் வரை சூரியனை பார்த்தல் மட்டும் நாணம் 
கொண்ட என் கண்கள் - இன்று முதல் பெண்களுக்கும் 
என் கண்கள் அடி பணிந்தது 

பெண் அல்ல பெண்களை பார்த்தாலே என் கண்கள் 
சடுகுடு ஆடுகிறது 
தம்பி என்று உரிமையோடு அழைக்கும் - பெண்களுக்கு கூட 
என் கண்கள் காதல் வலை வீசுகிறது 

மூடி வைத்த நீராவியை திறந்து வைத்தது போல்
என் முகத்தில் இருக்கும் பரு துளிகள் 
தூக்கம் என்று தெரிந்தே கனவுகள் 
காணும் என் கண்கள் 

"மறைவிடமாக இருக்கும் பொருளை 
பார்பதர்ககவே ஏங்கும் என் விழிகள்" 

"எனக்கும் கருவறையாகிய கழிப்பறைக்கும் 
தண்ணீரில் எழுதிய  ஒரு ஒப்பந்த ரகசியம்" 
இது எல்லாம் உறுதிபடுத்தியது - நான்   
பருவமாகி விட்டேன் என்று 
பெண்கள் பருவமுற்றால் - கொண்டாட்டம் 
ஆண்கள் பருவமுற்றால் - திண்டாட்டம் 
எறியும் நெருப்பை அனைப்பதற்கே தினம் தினம் 
போராட்டம் 
இறைவனால் படைக்க பெற்றானோ,அறிவியல் பூர்வமாக 
தோன்றினானோ இல்லை சுயம்புவாக உருவானானோ
என்று தெரியவில்லை 
அனால்,ஆறடி உயரத்திற்குள் ஆயிரமாயிரம் அதிசயமடா
 நான் இல்லற மனிதன் ஆகிவிட்டேன் என்று - என்னுள் 
இருக்கும் உடலுறுப்பு எனக்கு தெரியாமலேயே 
மாறுதல் கொள்கிறது
எவனாக இருந்தாலும் அந்த உணர்வுகள் படைத்தவன் 
எவனோ ! அவனே இறைவன் ஆவான்.....  

  


17 February 2011

இரவு வாழ்கை

"நடனம் எனபது கலாசாரம்-நாகரிகம் 
எனும் பெயரால் ஆகிறது விபச்சாரம்"

இருள் சூழ்ந்த இரவுகளில் விழித்திருக்கிறது 
விடுதியின் கண்கள் 

உன் உயிரில்லாத  பொழுது புண்ணியம் இருந்தால் 
திறக்கும் - சொர்கத்தின் வாசல்
உன் உயிருள்ள பொழுது அச்சடித்த காகிதம் இருந்தால் 
திறக்கும் - விடுதியின் வாசல் 

உடலுக்கு போதை - மது 
கண்களுக்கு போதை - மாது 

"அரியது யாவும் கூட எளியதாக தெரியும் மங்கும் 
ஒளிகளில்" காரணமின்றியே கால்கள் நடை போட தோன்றும் 

மௌனமான அந்த இருளில் அங்கு 
மட்டும் ஒலி சத்தமாக பாட கூடும் 

தடுமாறும் வாழ்கையில் நடனமாடும் கால்கள் 
தப்பு என்று தெரிந்தும் மயக்கும் நடனமாதுவின் கண்கள் 

ஆடை கூட தவறாக தெரியும் இந்த கண்களுக்கு 
வாடை காற்றும் கூட நாற்றமாக தான் மாறி போகும் 

இரவு முழுக்க நடனம் - விடிந்தால் தெரியும் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.  இது எல்லாம்,
                        நாகரிக கலாச்சாரம் - இதை ஒரு,
                        தவறாக கருதுவது அபச்சாரம் 

பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் விபச்சாரத்தை கூட நாகரிகமாக 
இரவு வாழ்கை என்கிறான்.

பணமுள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம் - அனால்,
பணமிள்ளாதவனுகோ இந்த ஏக்கத்திலேயே தன ஆயுளை முடிக்கிறான்  

22 December 2010

எங்களை சாம்பலாக்கி விடுங்கள்

இரவுபொழுது,
       நான் வேலையை  முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றேன்.சென்றவுடன்  குளித்துவிட்டு சாப்பிடுவதற்கென்று  அமர்ந்தேன்.
என் தாய் எனக்கு உணவை பரிமாறினால்.உணவருந்திய பிறகு என் தாய் வீட்டை பெருக்குவதற்காக துடபத்தை எடுத்து வந்தால்.ஆனால்,அதை வேகமாக ஒரு பதற்றதுடன் கீழே  தூக்கி எறிந்தால்.
  
                          அத்துடப்பதிலிருந்து ஒரு சிறிய சிகப்பு நிற இயந்திரம் போல் இரு கரப்பான் பூச்சிகள் வேகமாக ஓடியது. அது மறைவதற்கு இடம் தேடி அங்கும்,இங்குமாக அலைந்து எங்கள் வீட்டு தொலைகாட்சியின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டது.
அதை பார்த்தவுடன் கூச்சலிட தொடங்கினார் என் தாய்.அதை முதலில் அடித்து கொல்லுடா என்று குரலை உயர்த்தினார்.
                         "சிறு வயது முதலே பயமுறுத்த தெரியாத கரப்பான் பூச்சிகளை பார்த்து பயந்தே பழகி விட்டார்"
என்ன செய்வது,அவர்களுடைய பூ போன்ற மனதை பயம் என்னும் அறியாமை கல்லாக்கி விட்டது.நானும் என் தாயின் சொல்லிற்கேற்ப மெதுவாக சென்று எங்கள் வீட்டு தொலைக்காட்சியை நகர்த்தி பார்த்தேன் அவை இரண்டும் இளம் வயது கரப்பான்கள் போலும்,பழுப்பும் சிவப்பும் கலந்த ஒரு நிறம்  அச்சத்தினால் நடுங்கும் அதனுடைய உடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு இருந்தது.
                    
                      நான் மெதுவாக துடப்பத்தை திருப்பி கூர்மை பகுதி நீண்டவாறு பிடித்துகொண்டு வேகமாக அதன் மீது அடித்தேன்.ஆனால்,என் குறி தவறியது.ஏன் என்று தெரியவில்லை.அவை இரண்டும் இளம் வயது கரப்பான் என்பதால் இறக்கைகள் முளைக்கவில்லை.ஆதலால்,அவை இரண்டும் வேகமாக ஓட தொடங்கியது அதை பார்த்தவுடன் என் தாய் மேலும் டேய்,டேய், என அலற தொடங்கினால் மறுபடியும் கொல்லும் எண்ணத்தோடு அவைகளை நோக்கி வேகமாக அடித்தேன்.
          இப்பொழுது என் குறி தவறவில்லை அங்கேயே இரண்டும் சுருண்டு விழுந்தது.
அவ்வளவு தான் கதை முடிந்து விட்டது என்று என் தாய் பெருமூச்சி விட்டால் நாளை,முதலில் கடைக்கு சென்று இவைகளை கொல்வதற்காக மருந்து வாங்கி வர வேண்டும் என்று பேசியவாறே அவைகளை ஒரு மூலையில் தள்ளி விட்டு தூங்க சென்றால்.
சிறிது நேரம்கழித்து திடீரென்று,என் பார்வை என்னை அறியாமலேயே இறந்து கிடந்த கரப்பான்களின் மீது சென்றது.உற்று கவனித்தேன் அதில் ஒன்று இறந்திருக்க இன்னொன்று விட்டத்தை பார்த்தவாறு அதனுடைய சின்னச் சிறு கால்கள் துடித்து கொண்டிருந்தது பார்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது அது,ஏதோ பேசுவது போல் எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது.
ஆதலால்,நான் இன்னும் அதன் அருகே சென்று செவி கொடுத்தேன்.அப்பொழுது,துடித்து கொண்டிருந்த கரப்பான் சொல்லியது,எங்களை மன்னித்து விடுங்கள் என்றது நானும்,ஏன் என்று கேட்பது போல் தலையசைத்தேன் அது சொல்லியது.நானும் என் அண்ணனும் விளையாடுவதற்காக கிளம்பினோம் அப்பொழுது எங்கள் அம்மா சொன்னார்கள் மேலே மிகவும் உயரமாக மனிதர்கள் என்றழைக்கப்படும் ஒரு உயிரினம் இருக்கிறது அவர்கள் கண்களில் மட்டும் பட்டு விடாதீர்கள் என்றார்.
நாங்களும் சரி  என்று என் அண்ணனும் நானும் விளையாடுவதற்காக மேலே வந்தோம்.அப்பொழுது நீங்களெல்லாம் அங்கும்,இங்குமாக நடந்து சென்றுகொண்டிருந்தீர்கள் எங்கு உங்கள் கால்களால் நாங்கள் மிதிப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் உயரமாக இருக்குமந்த துடப்பத்தின் மீதேறினோம்.
                
                 ஆனாலும்,உங்கள் அம்மா எங்களை கண்டுபிடித்துவிட்டார்கள்.அதற்காக,
எங்களை நீங்கள் மன்னித்து விடுங்கள் என்று சொல்லியவாறே.
எனக்காக ஒரு உதவி செய்வீர்களா என்றது நானும் நெகிழ்ந்தவாறே என்ன என்று கேட்டேன் எங்களை தயவு செய்து தீயிலிட்டு சாம்பலாக்கி விடுங்கள் ஏனென்றால்,எங்களை காணவில்லையே என்று தேடிக் கொண்டிருக்கும் எங்கள் அம்மாவின் கண்களுக்கு எங்களின் இறந்த சடலங்களை காண நேர்ந்தால் எங்களின் மரணத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று உங்களை காண பறந்து வருவார்.ஆனால்,நீங்களோ எங்களை அடித்தது போல அவர்களையும் அடித்து கொன்றுவிடுவீர்கள்.அதனால்,தான் சொல்கிறேன் எங்களை சாம்பலாக்கி விடுங்கள் என்று அப்பொழுது தான் நாங்கள் எங்கோ வழிதவறி சென்று விட்டோம் உயிரோடுதான் இருக்கிறோம் என்றாவது ஒரு நாள் என்னை காண வருவார்கள் என்ற நம்பிக்கையில் என் அம்மா அவர் தன் ஆயுளை கழிப்பார்கள் என்று கரப்பான் சொல்லிய போதே என் மனம் கனக்க ஆரம்பித்தது.அப்பொழுது,தான் என் வாழ்நாளில் ஒரு பூச்சிக்காக  என் கண்களில் நீர் நிரம்பியது.

                        நான் சற்று யோசித்து பார்த்தேன் நான் செய்தது சரியா  என்று என்னை பார்த்து நானே வெட்கப்பட்டேன் போயும்,போயும் ஒரு பூச்சியிடமா என் வீரத்தை காட்டுவது என்று சலித்து கொண்டே மன்னிப்பு கேட்கலாம் என்று கரப்பானை பார்த்தேன் துடித்துக் கொண்டிருந்த அந்த பிஞ்சு கால்கள் அசையாமல் இருந்தது.மெதுவாக,என் விரல்களால் அசைத்துப் பார்த்தேன் மன்னிப்பு கேட்க வந்த என்னை மௌனமாக்கி விட்டு அதன் உயிர் பிரிந்தது விட்டது என்று புரிந்தது.
"அன்று இரவு முழுவதும் என் மூடிய விழிக்குள் அவை இரண்டும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது".

மனிதன் மற்ற உயிர்களை துச்சமாக நினைக்கிறான்-ஆனால்,
மனிதனுக்கு ஒன்று தெரியாது போலும் அவைகளை பார்த்து நாம் கற்றுகொள்ளவேண்டியது இன்னும் இருக்கிறது என்று.  

28 November 2010

தந்தை

தமிழ்லில் ஒரு பழமொழியாம் -அது
தந்தை சொல்மிக்க மந்திரமில்லயாம்

என் தந்தை சுமந்திருந்த எங்கள் குடும்பத்தை -என் முதுகில்
இறக்கி விட்டார் -நானும் அந்த பழமொழியை நினைவில் கொண்டு
ஏற்க தொடங்கினேன்

என் தந்தை ஒரு சுயநலவாதி : அவரின் நாவு ருசிக்காக எங்களை உண்ணாத விரதம் இருக்கச் சொன்னார்-அவருக்கு சாராய கடையில் கிடைத்த ருசி இன்னும் வீட்டில்க் கூட கிடைக்க வில்லையாம்

என் தந்தை ஒரு சமூகவாதி : சொத்து சேர்த்து வைத்து விட்டால் சோம்பேறியாக விடுவானோ என்ற நல் எண்ணத்தில் அவன்,உழைத்து உண்ணல் வேண்டும் என்ற நற்-பண்பில் ஒதுங்குவதர்க்குக் கூட இடம் இல்லாமல் செய்து விட்டார்.
நானும்,உழைப்பதற்கு வயதில்லை என்று உழைக்க தொடங்கினேன் என் குழந்தை பருவம் முதலே

அரசு ஒரு சட்டம் தீட்டியது.., அது
குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்தால் தொழிற்ச்சாலையை மூடி விடுவோம் என்று
பாவம்,அரசுக்கு ஒன்று தெரியாது போலும்,
இந்த குழந்தை பணிக்கு சென்றால் தான் குடும்பம் என்னும் தொழிற்ச்சாலை திறந்திருக்கும் என்று.....,

அன்புள்ள காதலிக்கு

இது என் நண்பனின் காதளுக்குகாக எழுதியது,

காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காலன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது

மூச்சின் கற்று விண்ணுலகை நோக்கி பயணிக்கும் போதும்
உன் பெயர் கொண்ட சொல் அழியாது

இனிமையான மொழியாம் என் தாய் மொழி தமிழ் -அதில்
ஆயிரம் சொற்கள் கொட்டி கிடக்க -அதில் மூன்று சொற்கள் மட்டும்
என் நாவில் வளம் வருவது ஏன்

மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
என் உயிர் அடக்கம்

உன் இனிமையான பெயரை கேட்ட இந்த செவிகளுக்கு -
வேறு பெயர் கேட்பதற்கு கசக்கிறது

அடி பெண்ணே கேள் !
நீ இல்லாத ஒரு உலகம் என் கனவிலும் கொல்லாது
உன் பெயரில்லாத என் பெயர் எந்த கல்லறையிலும் இருக்காது

பெயர் சொல்லாத ஒருவனை கடவுள் என்பேன்
பெயர் சூடிய உன்னை பிரியா என்பேன்